புதன், 6 ஆகஸ்ட், 2008

டைம்ஸ் ஆப் இண்டியாவின் முதலைக் கண்ணீர்

சோவியத்தை ஐந்தே வருடங்களில் பசிப்பிணி இல்லாத நாடாக மாற்றிய காவிய நாயகன் மேதகு ஸ்டாலின் அவர்களின் மீது அவதூறுகளை வாரி இறைத்த, மேற்கு ஏகாதிபத்திய கைகூலி சோல்ஸினிஸின் மரணமடைந்துள்ளான்.

முன்னாள் கோமாளி கோர்ப்பச்சேவ், இந்நாள் அடியாள் புடின், அமெரிக்க ஜெர்மனி எஜமானர்கள் இரங்கலை வெளியிட்ட டைம்ஸ் ஆப் இண்டியா, ருஷ்ய மக்கள் கண்ணீர் கடலில் மூழ்குவதாக கதை விட்டு தன் ஏகாதிபத்திய விசுவாசத்தை காட்டியுள்ளது.

மேலும், எப்போதுமே ஈழ விடுதலைப் போராட்டச் செய்திகளை ஒருதலைப்பச்சமாக இருட்டடிப்பு செய்வதுடன், அரசாங்க புள்ளி விவரங்களை மட்டும் வெளியிடும் இந்த இதழ், மற்ற இதழ்கள் பெயரளவிற்கு போடும் புதினம் அல்லது தமிழ்நெட் செய்திகளையும் போடுவதே இல்லை.

2 கருத்துகள்:

சொன்னது…

hai,
visit my blog.

பெயரில்லா சொன்னது…

நண்பரே
சோல்செனித்சின் குறித்த விரிவான கட்டுரை புதிய கலாச்சாரம் அக்" 08 இதழில் வந்துள்ளது. படித்துப் பார்க்கவும்
நன்றி
வினவு