புதன், 27 மே, 2009

தமிழீழப் போராட்டத்தைச் சாகடித்தவர்கள் யார் யார் ?

தமிழீழப் போராட்டம்,மிகவும் திட்டமிட்ட முறையில் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றது. இதற்கு யார் யார் காரணம் ?

1. இந்திய அரசு இயந்திரமும், பார்ப்பனிய பனியாக் கும்பலான 'ரா'

2. இந்திய, தமிழக அரசியல்வாதிகள்

3. மேற்குலக அதிகார வர்க்கம் மற்றும் மேற்குலக நிதி மூலதன கும்பல்

4. புலிகளின் ஆரம்பகால தவறுகள்

1. இந்திய அரசு இயந்திரமும், பார்ப்பனிய பனியாக் கும்பலான 'ரா'

"Well start is half done" என்பார்கள். ஆனால், 'ரா'வினுடைய வழிகாட்டுதலோடு, மேற்குலக சார்புடைய இலங்கை அரசினை கட்டுப்பாட்டில் வைப்பதற்காக, இந்திய அரசு 'ரா' வின் மூலமாக போராளிகளுக்கு ஆயுதம் அளித்தது. ஆயுதங்களோடு, போராளிக்குழுக்களிடையே பிளவையும் விதைத்தது. இந்திரா செய்த சாதனையின் பின் உள்ள நீண்டகால இந்திய நலன் இதுதான்.

இந்தியா தேசம் முழுவதையும் காப்பதற்கென்ற பிறவியெடுத்த நேரு குடும்பத்தின் இந்திரா ஆலமரம் சாய்ந்ததும், இந்த ஆலமரத்தின் விழுதான - தெற்காசியாவின் 'மிகப்பெரிய' தலைவரான இராஜீவ்காந்தி, தன் ஆதிக்கத்தை பெருக்குவதற்காக கிடைத்த மிகப் பெரிய சந்தர்ப்பம் இது என மனங்குளிர வைத்த தீட்சித் முதலான பார்ப்பனிய பனியா கும்பல்கள் ஆட்டியபடியெல்லாம் ஆடினார்.

ஈபிஆர்ல்ப்-க்கு எதிராக ஈபிடிபி, ஈபிடிபிக்கு எதிராக ப்ளாட், ப்ளாட்டிற்கு எதிராக விடுதலைப்புலிகள் என 'ரா' வின் 'சாணக்கிய திருவிளையாடல்', திம்பு பேச்சுவார்தையில் ஒற்றுமையாக இருந்த இயக்கங்களை சிதைத்தது.

எட்டாம் வகுப்பு வரையேப படித்து இருந்த அப்பாவியான பிரபாகரனாருக்கு, வீரம் இருக்கின்ற அளவிற்கு விவேகதோடு செயல்பட்டிருக்க வேண்டும். 'சொல்கிறவன் சொன்னாலும், கேட்கின்றவனுக்கு புத்தி எங்கே போச்சு' என்பார்கள் ! ஒரு தேசத்தின் தலைவிதியை எழுதுகின்ற பிரபாகரனார் இதனையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்திருக்க வேண்டும்.

ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம் ! ஈழப் போரில், புலிகளும் வெல்லவிலலை, சிங்களரும் வெல்லவிலலை. வென்றது, வட இந்திய முதலாளிகள் ! தமிழ்நாடு போன்று, இந்திய தரகு முதலாளிகளுக்கு ஒரு சிங்கள சந்தை கிடைத்து விட்டது !! இந்திரா வரைந்து, ராஜீவால் வளர்க்கப்பட்டு, பாரதிய ஜனதாவினால் சீராட்டப்பட்டு, சோனியாவினால் செவ்வனே வெற்றிகரமாக முடிக்கப்பட்டிருக்கின்றது. வாழ்க பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸின் தேசப்பற்று !!! இனி இந்திய தரகு முதலாளிகள், அமெரிக்கன் கடித்துப் போட்டவைகளை எல்லாம் கொண்டு போய் சிங்களர்களிடம் விற்று லாபம் பார்க்கலாம். அதேமாதிரி, சிங்கள பாட்டாளிகளின் உழைப்பில் விளைகின்ற சிங்கள டீ, டாடா கீரின் டீயாக தமிழகத்தில் ஏற்கனவே சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கின்றது ! இனி Green டீ - யிற்கு தமிழ் இரத்தம் ஊற்றி, செழிக்க செழிக்க வளர்ப்பார்கள் !!!

(வளரும்)

வெள்ளி, 22 மே, 2009

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் !!! - விடுதலைப்புலிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

உலகத் தமிழர்களின் உயிர்மூச்சு - புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கின்றார் என முதல் முறையாக புலிகள் அதிகாரப் பூர்வமாக அறிவித்து இருக்கின்றார்கள்.

புலிகளின் புலனாய்வுப் பிரிவுப் போராளி அறிவழகன் என்பவர், தமிழ்நெட் இணையதளத்திற்கு அளித்தப் பேட்டியில் இத்தகவலை அறிவித்து உள்ளார்.