புதன், 1 ஜூலை, 2009

தமிழீழப் போராட்டத்தைச் சாகடித்தவர்கள் யார் யார் ? - தொடர் - 1

இலங்கை - இந்தியாவின் நிழல் யூனியன் பிரதேசம்

இலங்கையில் ஏர்டெல் முதலீடு, காங்கேசன் துறை சீமெண்ட் ஆலையை இந்திய சிமெண்ட் ஆலை முதலாளி வாங்கியது, சீலோன் டீ போய் டாடா டீ வந்தது, மன்னார் கடல்பகுதியில் எண்ணைய் அகழ்வாய்வினை ரிலையன்ஸ் கம்பெனிக்கு வழங்கியது, சம்பூரில் அனல் மின்நிலையம் அமைக்க இந்தியா முடிவு என அனைத்து விடயங்களையும், புலிகளுக்கு எதிரபோரில் இலங்கைக்கு இந்தியா ஆதரவு, இலங்கைக்கு இந்தியா ராடார்கள், கொச்சி வழியாக இந்திய டாங்கிகள் இலங்கைக்கு அனுப்பி வைப்பு, இலங்கை உள்நாட்டுப் பிரச்சனைகளில் இந்தியா தலையிடாது என்பன போன்ற விடயங்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இந்திய மூலதனத்திற்கான இலவச இணைப்பாக பின்னவைகள் வழங்கப்பட்டுக் கொண்டிருப்பதை பாமரனும் புரிந்து கொள்ளலாம்.

மேலும், எம்.எஸ், சுவாமிநாதனின் "சுனாமி அழிவிலும் சில புதிய வாய்ப்புகள் திறக்கும்" என்ற 'பொருள்' பதிந்த பொன்மொழியையும் பொருத்திப் பார்த்துக் கொள்ளுங்கள், உண்மைப் புரியும்.

பிரணாப்பை அனுப்பு என்று தமிழக மறவர்கள் (????) நடத்திய வீரம் மற்றும் விவேகம் (???) செறிந்த போராட்டம் மற்றும் தந்திகள், கடிதங்களுக்குப் பின்பு, இலங்கைச் சென்ற பிரணாப் முகர்ஜி என்ற அயோக்கியப் பயல், இலங்கை அரசிடம், தமிழகத்தில் தோன்றிய கடும் எதிர்ப்பையும், ஆனால் இந்திய அரசு அதனை இலங்கை அரசுக்கு ஆதரவாக சமாளித்ததையும் சுட்டிக்காட்டி, ஈழப்பிணங்களுக்குப் பின்பு, இலங்கையில் தமிழீழப் பகுதிகளில் 'பாடைக்' கட்டும் பணியை தம்மிடமே ஒப்படைக்க வேண்டும் என்று கம்பீரமாகக் கேட்டுக் கொண்டார்.

சரி ! இந்திய அரசின் முதலாளிகளுக்கு இலங்கையில் கிடைக்கக் கூடிய ஆகக் கூடிய பலன்களைப் பற்றி மிகசுருக்கமாகப் பார்த்தோம்.


ராவிற்கு இந்தப் பலன்களைவிட இன்னும் சிலக் காரணங்கள், ஈழத்தை அழிப்பதற்கு உண்டு :

1. காஷ்மீர் முதலாக வட கிழக்கு ஈறாக பல்வேறு தேசிய இனங்களை ஒடுக்குகின்ற இந்திய மேலாதிக்கம் - எந்த நிலையிலும் ஈழப் போரினை ஆதரவளிக்கப் போவதில்லை.

2. தமிழகம், இந்திய மூலதனத்தின் மிகச் சிறந்த சந்தை மற்றும் மலிவான உழைப்பு கிடைக்கக் கூடிய இடம், மிக மலிவான விலையில் தொழில் நுட்பப் பணியாளர்கள் கிடைக்கக் கூடிய இடம் - சுருங்கச் சொன்னால் சுரண்டலுக்கேற்ற சிறந்த இடம். மேலும், இந்த சுரண்டலுக்கு ஆதரவாக பரவலான உள்நாட்டு (தமிழ்) முதலாளிகள் நிரம்பி வழியும் இடம், அதனால் சுரண்டலை எதிர்க்கும் முற்போக்குச் சக்திகள், இந்தி மற்றும் தமிழ் முதலாளிகள் என்ற இரு இடங்களில் இருந்தும் எதிர்ப்பைச் சமாளிக்க வேண்டி உள்ளது. புதிய (படித்த) பார்ப்பனியர்கள் மற்றும் பழையப் பார்ப்பனியர்கள் நிரம்பிய அடிவருடிகள் நிரம்பிய இடம். ஈழ ஆதரவு, தமிழகத்தின் மீதான தனது பிடியினை (நெடுங்கால நோக்கில்) தளர்த்தி விடும் என்ற பயம், ராவிற்கும், இந்திய தரகு முதலாளி வர்க்கத்திற்கும் உண்டு.

3. தமிழர் ஒரு தேசிய இனம் என்று ஒத்துக் கொண்டால், பார்ப்பனியர்கள் விடாப்பிடியாக சொல்லி வருகின்ற ஒரே ஆரிய இனம் (தமிழர் திராவிடர் என்பதேல்லாம் எதிரிகளின் கற்பனை) என்ற பார்ப்பனிய சிந்தனை, ஈழப் பிரச்சனையை இந்தியா ஆதரித்தால் அடிப்பட்டு போய் விடும்.

4. இலங்கைச் சிங்களவர்கள், வடவிந்தியர்களின் வழிதோன்றல்கள் என்ற கருத்து சிங்களர்களிடம் பரவலாக உண்டு. இந்திரா முதலானோரின் மூக்கினை ஜெயவர்த்தனையேயின் மூக்கோடு ஒப்பிட்டு புளகாங்கிதமடையும் எழுத்துகள் சிங்களத்தில் உண்டு.

5. இலங்கை அல்ல இந்தியாவினைச் சுற்றி உள்ள எல்லா தேசங்களிலும் பிரச்சனைகள் ஓயாமல் இருந்தால்தான், இந்தியா 'நாட்டாமை' மாதிரி மூக்கை நுழைக்க முடியும். அதன்மூலமாக தங்கள் வியாபாரம் செய்யமுடியும்.

6. புலிகள் என்னதான் இந்தியாவின் காலடியில் விழுந்து கதறினாலும், புலிகள் தலைமையிலான விடுதலைப் போரினை ஆதரித்தால், தனித்து அமையும் தமிழீழ விடுதலை தேசம் அமைந்து விட்டால், இரு தேசங்களின் ஆளும் வர்க்கங்களோடு இந்தியா வியாபாரத்திற்காக மல்லு கட்ட வேண்டும். (உதாரணம் : ரா அமைத்த பங்களாதேஷ்)

(வளரும்)