புதன், 6 ஆகஸ்ட், 2008

டைம்ஸ் ஆப் இண்டியாவின் முதலைக் கண்ணீர்

சோவியத்தை ஐந்தே வருடங்களில் பசிப்பிணி இல்லாத நாடாக மாற்றிய காவிய நாயகன் மேதகு ஸ்டாலின் அவர்களின் மீது அவதூறுகளை வாரி இறைத்த, மேற்கு ஏகாதிபத்திய கைகூலி சோல்ஸினிஸின் மரணமடைந்துள்ளான்.

முன்னாள் கோமாளி கோர்ப்பச்சேவ், இந்நாள் அடியாள் புடின், அமெரிக்க ஜெர்மனி எஜமானர்கள் இரங்கலை வெளியிட்ட டைம்ஸ் ஆப் இண்டியா, ருஷ்ய மக்கள் கண்ணீர் கடலில் மூழ்குவதாக கதை விட்டு தன் ஏகாதிபத்திய விசுவாசத்தை காட்டியுள்ளது.

மேலும், எப்போதுமே ஈழ விடுதலைப் போராட்டச் செய்திகளை ஒருதலைப்பச்சமாக இருட்டடிப்பு செய்வதுடன், அரசாங்க புள்ளி விவரங்களை மட்டும் வெளியிடும் இந்த இதழ், மற்ற இதழ்கள் பெயரளவிற்கு போடும் புதினம் அல்லது தமிழ்நெட் செய்திகளையும் போடுவதே இல்லை.

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2008

தமிழ்நாட்டுத் தமிழர்கள்

http://www.tamilnaatham.com/articles/2008/aug/special/nilavaram20080804.htm - என்ற கட்டுரைக்கு என்னுடைய மறுபதில்.

யார் முயன்றாலும் , மீட்க முடியாத அளவிற்கு மிகச் சிறந்த (உலக நாடுகள் எல்லாம் மெச்சக் கூடிய) நுகர்வோர்களாகத் தமிழ் நாட்டுத் தமிழர்கள் இன்று மாற்றப்பட்டு விட்டார்கள். ரஜினியின் முகப் போலிவின் மர்மம் என்ன ? மற்றும் நமீதாவின் உள்ளாடை என்ன பிராண்ட் என்பது மட்டும் தான், இந்திய இறையாண்மைக்குட்பட்ட - அனுமதிக்கப்படும் சமூக நலன் சார்ந்த விவாதங்கள். புயல்களெல்லாம் தோட்டத்தில் ஓய்வெடுக்கப் போய்விட்டன. மூதறிஞசர்களெல்லாம் முதலாளிகளாகி வெகு நாட்களாகி விட்டது !!!

இனி மெல்லத் தமிழினி சாக வேண்டியது தான் பாக்கி !!!!

அறிவுடைநம்பி
http://purachikavi.blogspot.c