திங்கள், 31 ஆகஸ்ட், 2009

Tamizachi : : தமிழச்சி

தமிழச்சியின் கத்தி ?
Tamizachi : : தமிழச்சி

புதன், 1 ஜூலை, 2009

தமிழீழப் போராட்டத்தைச் சாகடித்தவர்கள் யார் யார் ? - தொடர் - 1

இலங்கை - இந்தியாவின் நிழல் யூனியன் பிரதேசம்

இலங்கையில் ஏர்டெல் முதலீடு, காங்கேசன் துறை சீமெண்ட் ஆலையை இந்திய சிமெண்ட் ஆலை முதலாளி வாங்கியது, சீலோன் டீ போய் டாடா டீ வந்தது, மன்னார் கடல்பகுதியில் எண்ணைய் அகழ்வாய்வினை ரிலையன்ஸ் கம்பெனிக்கு வழங்கியது, சம்பூரில் அனல் மின்நிலையம் அமைக்க இந்தியா முடிவு என அனைத்து விடயங்களையும், புலிகளுக்கு எதிரபோரில் இலங்கைக்கு இந்தியா ஆதரவு, இலங்கைக்கு இந்தியா ராடார்கள், கொச்சி வழியாக இந்திய டாங்கிகள் இலங்கைக்கு அனுப்பி வைப்பு, இலங்கை உள்நாட்டுப் பிரச்சனைகளில் இந்தியா தலையிடாது என்பன போன்ற விடயங்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இந்திய மூலதனத்திற்கான இலவச இணைப்பாக பின்னவைகள் வழங்கப்பட்டுக் கொண்டிருப்பதை பாமரனும் புரிந்து கொள்ளலாம்.

மேலும், எம்.எஸ், சுவாமிநாதனின் "சுனாமி அழிவிலும் சில புதிய வாய்ப்புகள் திறக்கும்" என்ற 'பொருள்' பதிந்த பொன்மொழியையும் பொருத்திப் பார்த்துக் கொள்ளுங்கள், உண்மைப் புரியும்.

பிரணாப்பை அனுப்பு என்று தமிழக மறவர்கள் (????) நடத்திய வீரம் மற்றும் விவேகம் (???) செறிந்த போராட்டம் மற்றும் தந்திகள், கடிதங்களுக்குப் பின்பு, இலங்கைச் சென்ற பிரணாப் முகர்ஜி என்ற அயோக்கியப் பயல், இலங்கை அரசிடம், தமிழகத்தில் தோன்றிய கடும் எதிர்ப்பையும், ஆனால் இந்திய அரசு அதனை இலங்கை அரசுக்கு ஆதரவாக சமாளித்ததையும் சுட்டிக்காட்டி, ஈழப்பிணங்களுக்குப் பின்பு, இலங்கையில் தமிழீழப் பகுதிகளில் 'பாடைக்' கட்டும் பணியை தம்மிடமே ஒப்படைக்க வேண்டும் என்று கம்பீரமாகக் கேட்டுக் கொண்டார்.

சரி ! இந்திய அரசின் முதலாளிகளுக்கு இலங்கையில் கிடைக்கக் கூடிய ஆகக் கூடிய பலன்களைப் பற்றி மிகசுருக்கமாகப் பார்த்தோம்.


ராவிற்கு இந்தப் பலன்களைவிட இன்னும் சிலக் காரணங்கள், ஈழத்தை அழிப்பதற்கு உண்டு :

1. காஷ்மீர் முதலாக வட கிழக்கு ஈறாக பல்வேறு தேசிய இனங்களை ஒடுக்குகின்ற இந்திய மேலாதிக்கம் - எந்த நிலையிலும் ஈழப் போரினை ஆதரவளிக்கப் போவதில்லை.

2. தமிழகம், இந்திய மூலதனத்தின் மிகச் சிறந்த சந்தை மற்றும் மலிவான உழைப்பு கிடைக்கக் கூடிய இடம், மிக மலிவான விலையில் தொழில் நுட்பப் பணியாளர்கள் கிடைக்கக் கூடிய இடம் - சுருங்கச் சொன்னால் சுரண்டலுக்கேற்ற சிறந்த இடம். மேலும், இந்த சுரண்டலுக்கு ஆதரவாக பரவலான உள்நாட்டு (தமிழ்) முதலாளிகள் நிரம்பி வழியும் இடம், அதனால் சுரண்டலை எதிர்க்கும் முற்போக்குச் சக்திகள், இந்தி மற்றும் தமிழ் முதலாளிகள் என்ற இரு இடங்களில் இருந்தும் எதிர்ப்பைச் சமாளிக்க வேண்டி உள்ளது. புதிய (படித்த) பார்ப்பனியர்கள் மற்றும் பழையப் பார்ப்பனியர்கள் நிரம்பிய அடிவருடிகள் நிரம்பிய இடம். ஈழ ஆதரவு, தமிழகத்தின் மீதான தனது பிடியினை (நெடுங்கால நோக்கில்) தளர்த்தி விடும் என்ற பயம், ராவிற்கும், இந்திய தரகு முதலாளி வர்க்கத்திற்கும் உண்டு.

3. தமிழர் ஒரு தேசிய இனம் என்று ஒத்துக் கொண்டால், பார்ப்பனியர்கள் விடாப்பிடியாக சொல்லி வருகின்ற ஒரே ஆரிய இனம் (தமிழர் திராவிடர் என்பதேல்லாம் எதிரிகளின் கற்பனை) என்ற பார்ப்பனிய சிந்தனை, ஈழப் பிரச்சனையை இந்தியா ஆதரித்தால் அடிப்பட்டு போய் விடும்.

4. இலங்கைச் சிங்களவர்கள், வடவிந்தியர்களின் வழிதோன்றல்கள் என்ற கருத்து சிங்களர்களிடம் பரவலாக உண்டு. இந்திரா முதலானோரின் மூக்கினை ஜெயவர்த்தனையேயின் மூக்கோடு ஒப்பிட்டு புளகாங்கிதமடையும் எழுத்துகள் சிங்களத்தில் உண்டு.

5. இலங்கை அல்ல இந்தியாவினைச் சுற்றி உள்ள எல்லா தேசங்களிலும் பிரச்சனைகள் ஓயாமல் இருந்தால்தான், இந்தியா 'நாட்டாமை' மாதிரி மூக்கை நுழைக்க முடியும். அதன்மூலமாக தங்கள் வியாபாரம் செய்யமுடியும்.

6. புலிகள் என்னதான் இந்தியாவின் காலடியில் விழுந்து கதறினாலும், புலிகள் தலைமையிலான விடுதலைப் போரினை ஆதரித்தால், தனித்து அமையும் தமிழீழ விடுதலை தேசம் அமைந்து விட்டால், இரு தேசங்களின் ஆளும் வர்க்கங்களோடு இந்தியா வியாபாரத்திற்காக மல்லு கட்ட வேண்டும். (உதாரணம் : ரா அமைத்த பங்களாதேஷ்)

(வளரும்)

திங்கள், 1 ஜூன், 2009

பிரபாகரன் எம்மை ஈன்றெடுக்காத தந்தை

தாய்நாடு இணையத்தில் வந்த பின்னூட்டக் கவிதை - தமிழனால்

பிரபாகரனே!
என் தலைவனே
என்னை ஈன்று எடுக்கா தாயே! தளபதியே!

உன் போராட்டம் ஆரம்பமாகிற போது- பிறக்கவில்லை நான்
பிறந்திருந்தால் உன்னுடன் போர்க்களம் புகுந்திருப்பேன்

என் கட்ட விரல் வாயில் இருக்கும் போது- உணரவில்லை நான்
என் இனத்திற்காக ஒரு எரிமலை எழுந்திருக்கிறது என்று !
அறியா வயதில் உன் முதல் மரண நாடகத்தை கேட்டேன்
அப்போதும் நான் நம்பவில்லை
என் இனத்தின் ஆலமரம் சாய்ந்ததென்று

இரண்டாம் முறையாக உன் மரணத்தைக் கேட்க
என் செவிகளே மறுத்துவிட்டன

உணர்ந்தேன்..... உணர்ந்தேன்
நீயே என் தொப்புல் கொடி உறவு என்று...

உணர்ந்தேன்....... உணர்ந்தேன்
இந்தியா என் நாடல்ல... ஈழம் தவிர வேறு ஏதுடா பிறந்த நாடு...
நெஞ்சம் பொறுக்கவில்லை..
அங்கே என் உறவு மடிகின்ற செய்தி கேட்டு...

என் உடன் பிறவா புலிகளே..
என்னை அழைத்துச் செல்லுங்கள் உங்களுடன்..
நானும் போராடுகிறேன் உங்களுடன்...
கவிதைக்காக இல்லை மேலேயுள்ள வரிகள்...

சிங்கள ராணுவமே காத்திரு...
புலிகளை அழித்து விட்டோம் என்ற ஆணவம் வேண்டாம்....
ஒரு பெரிய தவறைச் செய்துவிட்டாய் சிங்களனே...
என் தலவனைக் கொன்றுவிட்டோம் என்ற நாடகத்தை நடத்தி....
அமைதியாய் இருந்த உலக தமிழர்களை..
என் தலைவனிடம் பயிற்சி பெறாத புலிகளாக மாற்றி விட்டாயடா....

காத்திரு சிங்களனே...
இனி உனக்கு சாவு மணி காத்திருக்கிறது 5-ஆம் ஈழப் போரில்...
வருவார் என் தலைவன்..
நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு...
ஓய மாட்டார் என் தலைவர்...
தமிழர்காக ஈழம் பெறும் வரை..
மரணமே அவரைக் கண்டால் நடுங்குமடா..

புதன், 27 மே, 2009

தமிழீழப் போராட்டத்தைச் சாகடித்தவர்கள் யார் யார் ?

தமிழீழப் போராட்டம்,மிகவும் திட்டமிட்ட முறையில் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றது. இதற்கு யார் யார் காரணம் ?

1. இந்திய அரசு இயந்திரமும், பார்ப்பனிய பனியாக் கும்பலான 'ரா'

2. இந்திய, தமிழக அரசியல்வாதிகள்

3. மேற்குலக அதிகார வர்க்கம் மற்றும் மேற்குலக நிதி மூலதன கும்பல்

4. புலிகளின் ஆரம்பகால தவறுகள்

1. இந்திய அரசு இயந்திரமும், பார்ப்பனிய பனியாக் கும்பலான 'ரா'

"Well start is half done" என்பார்கள். ஆனால், 'ரா'வினுடைய வழிகாட்டுதலோடு, மேற்குலக சார்புடைய இலங்கை அரசினை கட்டுப்பாட்டில் வைப்பதற்காக, இந்திய அரசு 'ரா' வின் மூலமாக போராளிகளுக்கு ஆயுதம் அளித்தது. ஆயுதங்களோடு, போராளிக்குழுக்களிடையே பிளவையும் விதைத்தது. இந்திரா செய்த சாதனையின் பின் உள்ள நீண்டகால இந்திய நலன் இதுதான்.

இந்தியா தேசம் முழுவதையும் காப்பதற்கென்ற பிறவியெடுத்த நேரு குடும்பத்தின் இந்திரா ஆலமரம் சாய்ந்ததும், இந்த ஆலமரத்தின் விழுதான - தெற்காசியாவின் 'மிகப்பெரிய' தலைவரான இராஜீவ்காந்தி, தன் ஆதிக்கத்தை பெருக்குவதற்காக கிடைத்த மிகப் பெரிய சந்தர்ப்பம் இது என மனங்குளிர வைத்த தீட்சித் முதலான பார்ப்பனிய பனியா கும்பல்கள் ஆட்டியபடியெல்லாம் ஆடினார்.

ஈபிஆர்ல்ப்-க்கு எதிராக ஈபிடிபி, ஈபிடிபிக்கு எதிராக ப்ளாட், ப்ளாட்டிற்கு எதிராக விடுதலைப்புலிகள் என 'ரா' வின் 'சாணக்கிய திருவிளையாடல்', திம்பு பேச்சுவார்தையில் ஒற்றுமையாக இருந்த இயக்கங்களை சிதைத்தது.

எட்டாம் வகுப்பு வரையேப படித்து இருந்த அப்பாவியான பிரபாகரனாருக்கு, வீரம் இருக்கின்ற அளவிற்கு விவேகதோடு செயல்பட்டிருக்க வேண்டும். 'சொல்கிறவன் சொன்னாலும், கேட்கின்றவனுக்கு புத்தி எங்கே போச்சு' என்பார்கள் ! ஒரு தேசத்தின் தலைவிதியை எழுதுகின்ற பிரபாகரனார் இதனையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்திருக்க வேண்டும்.

ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம் ! ஈழப் போரில், புலிகளும் வெல்லவிலலை, சிங்களரும் வெல்லவிலலை. வென்றது, வட இந்திய முதலாளிகள் ! தமிழ்நாடு போன்று, இந்திய தரகு முதலாளிகளுக்கு ஒரு சிங்கள சந்தை கிடைத்து விட்டது !! இந்திரா வரைந்து, ராஜீவால் வளர்க்கப்பட்டு, பாரதிய ஜனதாவினால் சீராட்டப்பட்டு, சோனியாவினால் செவ்வனே வெற்றிகரமாக முடிக்கப்பட்டிருக்கின்றது. வாழ்க பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸின் தேசப்பற்று !!! இனி இந்திய தரகு முதலாளிகள், அமெரிக்கன் கடித்துப் போட்டவைகளை எல்லாம் கொண்டு போய் சிங்களர்களிடம் விற்று லாபம் பார்க்கலாம். அதேமாதிரி, சிங்கள பாட்டாளிகளின் உழைப்பில் விளைகின்ற சிங்கள டீ, டாடா கீரின் டீயாக தமிழகத்தில் ஏற்கனவே சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கின்றது ! இனி Green டீ - யிற்கு தமிழ் இரத்தம் ஊற்றி, செழிக்க செழிக்க வளர்ப்பார்கள் !!!

(வளரும்)

வெள்ளி, 22 மே, 2009

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் !!! - விடுதலைப்புலிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

உலகத் தமிழர்களின் உயிர்மூச்சு - புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கின்றார் என முதல் முறையாக புலிகள் அதிகாரப் பூர்வமாக அறிவித்து இருக்கின்றார்கள்.

புலிகளின் புலனாய்வுப் பிரிவுப் போராளி அறிவழகன் என்பவர், தமிழ்நெட் இணையதளத்திற்கு அளித்தப் பேட்டியில் இத்தகவலை அறிவித்து உள்ளார்.

வெள்ளி, 17 ஏப்ரல், 2009

மின்னல் வேகத்தில் சாகும் என் தமிழினம் !

ஏய் தமிழகமே ! நீ என்ன இந்திய உற்பத்திப் பொருட்களை நுகரும் எருமை மாட்டுக் கூட்டம் மட்டும் தானா ? உன் உயிர் போகும் போது தான், உனக்கு சுரணை வருமா ? அல்லது அப்போதும், சட்டத்திற்கு உட்பட்டு அமைதியாக உயிரை விடுவாயா ?

இரத்தக்கண்ணீர் வடிக்கின்ற என் தமிழ் சமுதாயம்
அரசு எழிலன் எழுதிய கவிதை :

கருணாநிதிக்கு ஓர் கவிதை

கன்னித்தமிழ்ப் பெண்ணை கயவர்கள் கற்பழிக்க
கைகட்டி வாய்ப்பொத்தி கைக்கூலியாய் நின்று,
கண்ணகிக்கு சிலையெடுத்து கவிபாடும் கறுப்பாடு!

தம்பி, தம்பியென்று தமிழனை நம்பவைத்து தக்க
சமயத்தில் தலையறுக்கும் கருங்காலி கருணாநிதியே...!

சொல்லிச்சொல்லி உனை வரலாறு ஏசும்!
உன் பெயர் சொன்னாலே தமிழுக்கு கூசும்.

சொத்துக்குவிப்பதையே தொழிலாக செய்து செய்து
செத்துப்போன உன் செவிகளுக்கு கேட்கலையோ
கத்திக் கதறிய என் முத்துக்குமரன் ஒலி!

பௌத்த நெறிபடித்து, சிங்கள வெறிபிடித்து, தமிழன் உயிர்குடித்து,
தோள்கள் திணவெடுத்து, பெண்கள் முலையறுத்து, தமிழன் இனமழிக்க துடிக்கின்றான் சிங்களவன் அங்கே!

தெய்வக்குறள் படித்து, பதவி வெறிபிடித்து, சூது மிக வளர்த்து,
ஊதி உடல் பெருத்து, பாதித் தமிழகத்தை, பரம்பரைக்கு எழுதிவிட
தவிக்கின்றான் எங்களவன் இங்கே!

இத்தாலி எருமைக்கு தப்பாது தாளமிடும்
சப்பாணிக் கழுதையே - இனி
எப்போதும் மறவாது தமிழினம் - உனை
எப்போதும் மறவாது தமிழினம்!

தமிழினம் அழிகிறது! தமிழகம் அழுகிறது!
தலைவன் நீ என்ன செய்தாய்!

தனி அறையில் ஓய்வெடுத்து, திறம்பட நீ நடித்து,
முதுமையிலும் இளமைகண்டாய்! - எங்கள்
முதுகெலும்பை ஏன் உடைத்தாய்!

பொட்டென்று விழுந்தவன் பொசுக்கென்று போய்விடுவான்
சட்டென்று தமிழகம் விழித்தெழும் என்றிருக்க!
எட்டிப்பிடித்த சனி விட்டுத்தொலையாதெனும்
வெட்டிப் பழமொழிக்கு சான்றாக வந்துவிட்டாய்

குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பே! - உன்
சிரத்தை அரிந்துவரச் சொன்னான் ஒரு வடவன்
சினந்து எழுந்தோம் தமிழ்த்தலைவன் நீ என்று - இன்று
உணர்ந்து கொண்டோம் அது மிகப்பெரிய தவறென்று!

தமிழைக்கொண்டே தமிழனை அழித்து விட்டாய்! - இனி உன்
மந்திரத் தமிழ் நடை மயக்காது எங்களை
உன் உதட்டோர புன்னகையை உண்மையென நம்பினோம்
ஒட்டுமொத்த தமிழரின் புதைக்குழி என்றறியாமல்!

இசைபாடும் புலவன் இன்று வசை பாட வந்ததேன்
அசையாத கல் மனது அசைந்திடும் என்பதாலா? இல்லை
கடுப்பேறி குமைந்திருக்கும் என் போன்ற இதயங்கள்
இளைப்பாற ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திடவே!

தமிழனை குறைவாக எடைபோட்டாய்!
தமிழனுக்கு எதிராக தடை போட்டாய்!
முடிந்தது உன் ஆட்சி!
மடிந்தது உன் சூழ்ச்சி!

அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றெனும் நீதியும் நிலைக்கட்டும்!
அடிவயிறு எரிகின்ற அன்னையரின் வெப்பம் உனை
அப்படியே பொசுக்கட்டும்!
ஆதித்தமிழினம் அகிலத்தை ஆளும்!
அடிமை விலங்குகள் துகள்களாய் உடையும்!
அன்னியன் ஆதிக்கம் அடியோடு ஒழியும்!
அன்பெனும் ஒரு குடையுள் அகிலமே திரளும்!

சுதந்திரக்காற்று பரவட்டும் எங்கனும்
சுதந்திரக்காற்று பரவட்டும் எங்கனும் - இது
சத்தியம்! சத்தியம்! சத்தியம்!
- UNMAITH THAMIZHAN

சனி, 7 பிப்ரவரி, 2009

புலிகளின் ஊடறுப்புத் தாக்குதலில் 1000 ற்கு மேற்பட்ட படையினர் பலி! பெருமளவான போர்க் கருவிகள் புலிகள் வசம்! - புதினம் இணைய தளம்

புலிகளின் ஊடறுப்புத் தாக்குதலில் 1000 ற்கு மேற்பட்ட படையினர் பலி! பெருமளவான போர்க் கருவிகள் புலிகள் வசம்! - புதினம் இணைய தளம்

இலங்கை அரக்கன் கோமாளி ராஜபக்சே, இன்னும் ஓரிரு நாடகளில், புலிகள் முற்றிலும் அழிக்கப்படுவார்கள் என்று, கொழும்பில் கூப்பாடு போடும் போது, புலிகள் சத்தமில்லாமல், ஒரு ஊடறுப்பு தாக்குதல் நிகழ்த்தி, 1000த்திற்கும் மேற்பட்ட சிங்கள பேரினவாத கொலைகாரர்களை கொன்று,3.5 சதுர கீலோமீட்டர் பகுதியை மீட்டுள்ளனர்.

மேலும் பெருந்தொகையான ஆயுதங்களையும் மீட்டுள்ளனர். மேலும், வன்னி முழுவதும் அகன்று நின்று பலவீனமாக உள்ள இராணுவ பின்நிலைகள் மீதும் தாக்குதல் நிகழ்த்தி, சுமார் 20க்கும் மேற்பட்ட வழங்கல் வாகனங்களை அழித்துள்ளனர் என அறிய முடிகிறது.

ஊடறுப்புத் தாக்குதலின் போது மீட்கப்பட்ட படையப் பொருட்கள்

81 மி.மீ மோட்டார்கள் - பல
120 மி.மீ மோட்டார்கள் - பல
120 மி.மீ மோட்டார் எறிகணைகள் - 2000 வரையில்
81 மி.மீ மோட்டார் எறிகணைகள் - 8000 வரையில்
துப்பாக்கிகள் - நூற்றுக் கணக்கில்
ஏ.கே துப்பாக்கி ரவைகள் - ஒரு மில்லியனுக்கு மேல்
ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்திகள் - பல
ஆர்.பி.ஜி உந்துகணைகள் - பல
டாங்கி எறிகணைகள் பல நூறு

என பல படையப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

Example

http://www.pathivu.com/news/195/54/1000.aspx

வியாழன், 5 பிப்ரவரி, 2009

தோழர்கள் முத்துக்குமார் மற்றும் ரவிக்கான வலைப்பதிவாளர்களின் வீரவணக்கக் கூட்டம்.

தோழர்கள் முத்துக்குமார் மற்றும் ரவிக்கான வலைப்பதிவாளர்களின் வீரவணக்கக் கூட்டம்.

வலைப்பதிவுத் தோழர்களே!

ஈழத்தில் இனப்படுகொலைகளை நிகழ்த்திவரும் சிங்களப் பேரினவாதப் பாசிச அரசிற்கு எதிராகவும் அப்பேரின அரசிற்கு ஆயுதங்கள் கொடுத்து போரை வளர்த்து வரும் இந்திய ஏகாதிபத்தியப் பேரரசிற்கு எதிராகவும் அம்மத்திய அரசிற்குத் துணைபோகும் கருணாநிதியின் தமிழினத்துரோக அரசை அம்பலப்படுத்தும் விதமாகவும் தீக்குளித்து மாண்டுபோன போராளித்தோழர்கள் முத்துக்குமார், ரவி மற்றும் ஏனையோருக்கான வீரவணக்கக்கூட்டத்தில் உங்களையும் கலந்துகொள்ள அழைக்கிறோம்.

நாள் : 08.02.2009 ஞாயிறு மாலை 4 மணி

இடம் : நடேசன் பூங்கா, தி.நகர், சென்னை.


மேலும் தொடர்புகளுக்கு :

அதிஷா - 9884881824
ஆழியூரான் - 9840903590
சுகுணாதிவாகர் - 9790948623
லக்கிலுக் - 9841354308

ஒருங்கிணைப்பு : ஒடுக்குமுறைக்கு எதிரான வலைப்பதிவர் குழு.

இப்பதிவை வாசிக்கும் அனைத்து வலைப்பதிவு தோழர்களும் அவரவர் பதிவில் இந்த வீரவணக்க கூட்டத்துக்கான அறிவிப்பினை வெளியிடும்படி கேட்டுக் கொள்கிறோம்.

சனி, 3 ஜனவரி, 2009

கிளிநொச்சி வீழ்ந்ததா ?

கிளிநொச்சி வீழ்ந்ததாக சிங்களப்பார்ப்பனர்கள் கூக்கிரலிடுகிறார்கள். ஆனால், இதற்காக சிங்கள ராணுவம் சந்தித்த உயிரிழப்பு மிக அதிகம் ! இதுவரை 18 ஆயிரம் ராணுவ வீரர்கள், வன்னி நடவடிக்கை ஆரம்பித்த பின்பு கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதனால், குழந்தைவீரர்களையும் படையில் சேர்த்துப் போரிட சிங்கள ராணுவம் நிர்பந்திக்கப் பட்டுருக்கிறது. இந்த குழந்தகளின் பிணங்களையும் புலிகள் மீட்டு இருக்கிறார்கள்.

ஆக வியட்நாமில் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக வியட்நாமியப் போராளிகள் கையாணட அதே போர்தந்திரத்தை, புலிகள் இப்போது பின்பற்றி இருக்கிறார்கள்.
தங்களுடைய ஆயுதங்களையும், போராளிகளையும் பின்நகர்த்திய புலிகள், தங்கள் போராட்ட பலத்தினை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

வியட்நாமிய போராளி ஒருவரைப் பார்த்து, ஒரு அமெரிக்கச் சிப்பாய், வியட்நாமியப்போரில் ஒவ்வொரு ஒரு போரிலும், உங்களை நாங்கள் தோற்கடித்தோம்." அதற்கு அந்தப்போராளி, "அது உண்மைதான். ஆனால், மொத்த போரில் நாங்கள் தான் வென்றொம்" என்றார்.

ஆகவே, இந்த சின்ன சின்ன தந்திரோபாய பின்னகர்வுகளை - ஆயிரக்கணக்கான சிங்கள அயோக்கியர்களைக் கொன்று - போராட்ட சக்தியை தக்கவைக்கும் தந்திரோபாத்தை கண்டு மனம் தளரக் கூடாது.