திங்கள், 14 ஜூலை, 2008

இரயாகரனின் வறட்டு மார்சிசம்

இரயாகரன் அவர்களுடைய பின்வரும் கட்டுரைக்கு நான் இட்ட பின்னூட்டம் :

இரயாகரன் அவர்கள் பதில் அளிப்பார் என்று நம்புவோம் :

http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2130:2008-07-13-13-32-16&catid=74:2008&Itemid=76

அன்புள்ள இரயாகரன் அவர்களே !
இந்த கட்டுரைப் பற்றிய என் கேள்விகளை எழுப்பும் முன், உங்கள் "புலிப்பாசிசம் தோற்றுக் கொண்டு இருக்கிறது" என்ற கட்டுரைக்கு எழுதிய என் கேள்விகளுக்கு பதில் அளியுங்கள் :
மரியாதைக்குரிய இரயாகரன் அவர்களுக்கு, எனக்கு பின்வரும் சந்தேகங்கள் ஏற்படுகின்றன: 1. நீங்கள் சொல்வது போல் எந்த ஏகாதிபத்தியம் புலிகளின் அழிவைக் கண்டு கண்ணீர் வடிக்கின்றனர் ? 2. புலிகள் மக்களுக்கு எதிராக அப்படி என்ன செய்து விட்டார்கள் ? - உங்களால் பட்டியல் இட முடியுமா ? 3. புலிகள் அழிந்து வருவதாக சொல்கறீர்கள். 5000 வரையிலான புலிகள் கொல்லப்பட்டதாக உங்கள் முன்னைய பின்னூட்டம் ஒன்றில் படித்தேன். இதன் படி தற்போது வெறும் 4000 புலிகளே உள்ள நிலையில் (இராணுவ தளபதியின் கூற்றுப்படி) , இலங்கை இராணுவத்தால் ஒரு சில மணித்தூளிகளிலேயே கிளிநொச்சியை பிடித்து விட முடியுமே ?. இன்று வரை ஒரு அங்குலம் கூட நகர முடியவில்லையே ? 4. தலைவர் பிரபாகரன் செய்த ஒரே தவறு, மார்சிச வழியில் போராட்டத்தை நடத்தாதே ஆகும். ஆனால் இலங்கை அமைந்துள்ள கேந்திர முக்கியத்துவம் காரணமாக, 'மார்சிச வழியில் போராட்டம்' என்பதெல்லாம் அமெரிகக வல்லரசை வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பதாகவே முடியும். 5. புலிகள் கட்டுப்பாட்டிலுள்ள இடங்களிலெல்லாம் உணவு அளித்து மக்களை பராமரிப்பது யார் ?. இந்த மக்களின் உயிர் புலிகளினாலெயே காப்பாற்ற படுகிறதல்லவா ? 6. மக்களை புலிகள் கொன்று பாசிச ஆட்சி நடததும் பட்சத்தில், மக்கள் போராளிகளாக புலிப்படையில் இணைவது எதற்காக ? தங்கள் இன்னுயிரை கரும்புலிகளாக தருவது எதற்காக ?. 7. படிப்பறிவற்ற பாமர மக்களாக இருக்கும் பட்சத்தில், ஒரு ஐந்தாண்டு காலம் போதுமே மக்கள் புலிகளை நிராகரிக்க ? ஆனால் மக்களோ யாழிலிருந்து இடம் பெயர்ந்து வந்தனரே ஏன் ?. புலிகளின் பலவந்தனத்தால் எனில், இன்னும் சில லட்சக்கணக்கான மக்கள் யாழில் வாழ்வது ஏன் ? 8. உங்களை போல குருட்டு மார்க்கசிய வாதிகளினால், நடமுறைக்கு ஒத்துவராத வழிமுறைகளினை சொல்லவே முடியும். மார்கசிய வழியில் இயங்கிய EPRLF என்ன சாதித்தது என்பதை சொல்ல முடியுமா ?. மார்க்கசியம் ஒரு வாழ்க்கை தத்துவம். அதனை நெளிவு சுளிவுகளின் ஊடாகவே நிறைவேற்ற இயலும். 9. தனி பெரும் பலம் பெறுவது வரையே புலிகள், முதலாளித்துவ வழியினை பின்பற்றுவார்கள். இராணுவ பலம் பெற்று விட்டால் போதும், முழு அளவிலான சோசலிச அரசினை புலிகள் நிர்மாணிப்பார்கள்.

இரயாகரன் அவர்களே !

பிரபாகரன் நினைத்து இருந்தால், ராஜிவ் வீசிய எலும்புத் துண்டுகளுக்காக, வரதராஜப் பெருமாள் போன்று சொகுசாக வாழ்ந்து இருக்க முடியும். ஆனால், கொண்ட கொள்கை உறுதியெனப் பற்றிக் கொண்டு போராடிக் கொண்டு இருக்கின்றார். ஏன், சந்திரிகா காட்டிய ஆசையையும் ஊதாசினப்படுத்தி விட்டு தான் போராடிக் கொண்டு இருக்கின்றார். 1995இல் அவரகள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று சொன்னார்கள், வென்றுக் காட்டினார்கள். மக்கள் நிராகரித்தார்கள் என்றால், ஒரே ஒரு அரசு கூட ஆதரிக்காத நிலையில், இவ்வளவு காலம் போராடுகிறார்களே ! ? அது எப்படி ?

மீண்டும் சொல்லிக் கொள்கிறேன் - வறட்டு (உங்களைப்பற்றி சொன்னேன் - மார்சிசத்தை அல்ல ) மார்சிசத்தால் "ஆக்கபூர்வமாக எதுவும் செய்ய முடியாது.

அறிவுடைநம்பி.

1 கருத்துகள்:

சொன்னது…

அறிவு! இவர்கள் போன்றோர்கள் மதிப்பில் எடுக்கப்பட வேண்டிய எதிரிகளே இல்லை.
இவர்கள் சிங்களவர்களின் பணத்துக்கு இதை செய்யவில்லை என்று அடித்து வாதிடுகிறார்கள் அதற்கு சாட்சியாக்குகிறார்கள் சிங்கள அரசின்மீதும் மோசமான விமர்சகராம் தாம்.
உதாரணத்துக்காக சொல்லுகிறேன்,
சிங்கள forum ஒன்றில் புலிஆதரவின் பொருட்டு நான் கருத்தெழுதுவேனானால் புலிகளை மிகமோசமாக விமர்சிக்கவேண்டும் அங்கே எனது விமர்சனம் புதிய தாக்கத்தை உண்டு பண்ணாது கரும்பலகையில் கரி எழுதியது போலவேதான் இருக்கும்.
இதுபோலவேதான் இரயாகரன் போன்றோரும் அரசதரப்பை குறைகூறி தமிழர்களிடம் நம்பகத்தன்மைக்கு ஆதாரம் தேட முயல்கின்றார்கள் அதனிடையே விசம் விதைத்து சிங்கள எஜமானரிடம் விசுவாசப்புண்ணியம் தேடுகின்றார்கள்!
புலிகளின் தலைக்கு வரும் ஒவ்வொரு கல்லும் களிப்பைடைய செய்யப்போவது சிங்கள இனவாதிகளை அன்றி வேறு யாரையாம்?
கேள்விகளுக்கு பதில் எழுதுவதும் அவற்றை தன் பதிவில் அனுமதிப்பதும் தர்மமாக இரயாகரன் பழக்கத்துக்கு இருக்கும் என்றால் இன்று அவர் இணையத்தளம் இருப்பைத் தக்கவைத்திருக்குமா?
எத்தனை பதில்கள் எழுயிருப்பேன் அதன் பின்புதான் சொந்தமாய் ஒன்றை எழுதத்துணிந்தேன்.